1.bitcoin mining எத்தனை வகையாக உள்ளன?
இதுக்கு, bitcoin பத்தி மட்டும் இல்லாம, பொதுவா mining எடுத்துக்கிட்டு பாக்கலாம்.
mining என்பது ஒரு செய்கை/செயல்பாடு (process). அதாவது,blockchainல நடைபெறும் ஒவ்வொரு transactionsஉம் ஒரு குரூப்பா சேத்து ஒரு blockல வைக்கப்படும். அந்த குறிப்பிட்ட blockஐ blockchainல சேர்க்க நடைபெறும் செய்கையை miningனு சொல்லுவாங்க. ஒவ்வொரு blockchain அல்லது cryptocurrencyகு ஏத்த மாதிரி mining process வேறுபடும். ஒரு சில processல ஒரு கடினமான கணக்கு கொடுத்து தீர்வு காண சொல்லுவாங்க. அது அவங்க உபயோகிக்கிற crypto algorithm பொறுத்து இருக்கு.
இப்போதைக்கு இது hardware mining, software mining, pool mining, cloud mining அப்படினு வகை பட்டிருக்கு. அதெல்லாம் என்னனு அடுத்த கேள்விக்கான பதிலில் பார்க்கலாம்.
2.pool mining, hardware mining, software mining என்றால் என்ன?
miningனா என்னனு போன கேள்வில பாத்தாச்சு. இப்போ அதை எப்படிலாம் செய்யறதுன்னு பாக்கலாம்.
Hardware Mining : ஒரு சில cryptocurrencyகள mining பண்ண,ஸ்பெஷல் devices தேவை படுது.
எதனால ஸ்பெஷல் device தேவை படுது? போன பதில்ல சொன்ன மாதிரி தீர்வு கண்டு அதை proof செய்யறது மூலம் ஒரு block அந்த chainல சேர்க்கப்படுது. ஒரே கணக்கை உலகத்துல இருக்கற எல்லா minersஉம் solve பண்ண try பண்ணுவாங்க. அதுல யாரு சீக்கிரம் solve பண்ணி proof பண்றங்களோ அவங்களுக்கு ஒரு பரிசு (reward) கிடைக்கும். அந்த கணக்குக்கு விரைவாக தீர்வு காணதான் devices தேவை படுது. இந்த devices இதற்காகவே செய்ய பட்டவை. ASIC mining devices இப்போ மார்க்கெட்ல பேமஸ். இதுல கிடைக்கற rewards எல்லாமே உங்களுக்கு மட்டுமே.
http://blockchainstats.info/sites/default/files/inline-images/solo-mining-chart.pngSoftware Mining : ஒரு சில cryptocurrencyகள software மூலமா mining பண்ண முடியும்.உங்க கிட்ட இருக்கற laptop இல்ல desktopல அதற்கான software இன்ஸ்டால் பண்ணி நீங்களாகவே mining பண்ணலாம். Pool Miningகாண software இன்ஸ்டால் பண்ணி mine பண்ணறதுதான் ஈசி.
Pool Mining : ஒரு சில websites இந்த மாதிரி mining பன்றாங்க.அதாவது, oru block அந்த குரூப்ல இருக்கற பலபேர் சேர்ந்து mine பண்றாங்க. இது மூலமா பல பேர் சேர்ந்து ஒரு கணக்க solve பண்ணி அதற்கான பரிசை ஷேர் பண்ணிக்கிறாங்க.
http://blockchainstats.info/sites/default/files/inline-images/pool-mining-chart.pngCloud Mining : ஒரு சில websites இந்த options தராங்க. அதாவது நீங்க காசு மட்டும் கொடுத்தா போதும், அவங்களே உங்களுக்காக அவங்களோட கிளவுட் சர்வர்ல mining செஞ்சி உங்க பங்க உங்க அக்கௌன்ட்ல கொடுத்திருவாங்க.
3.mining செய்ய மினிமம் சிஸ்டம் ரெகுயிர்மென்ட் என்ன? (நான் வைத்திருப்பது goverment laptop.அதன் மூலமாக mining செய்து சம்பாதிக்க முடியுமா? அப்படி government laptopல் mining செய்ய எக்ஸ்ட்ராவாக என்ன device சேர்க்க வேண்டும்? அல்லது mining செய்ய சுத்தமாக goverment laptop ஒத்துவராதா?)
mining சம்பாரிக்கறது விரைவான காரியம் இல்ல. உங்க கிட்ட மிக சிறந்த தரமான configuration இருந்தா நீங்க சீக்கிரம் பணம் பார்க்கலாம் இல்லனா லேட் ஆகும். அவ்ளோதான்.
https://minergate.com சைட்ல register பண்ணி software download பண்ணி உங்க சிஸ்டம்ல run பண்ணலாம். நீங்க mine பண்றது பொறுத்து உங்களோட ஷேர் உங்களுக்கு கிடைக்கும்.
4.mining செய்ய நெட் ஸ்பீட் ஒரு நாளைக்கு எவ்வளவு இருக்க வேண்டும்? jio net 1gb போதுமா? 1gb முடிந்தவுடன் 128 kbps ஸ்பீடில் mining செய்ய முடியுமா?
mining செய்ய நல்ல CPU (மினிமம் டூயல் core போதும், அதுக்கு மேல இருந்தா நல்லது ) அல்லது GPU இருந்தா போதுமானது. உங்க ஜியோவே போதும் (இதை இன்னும் டெஸ்ட் பண்ணி பாக்கல அதனால sureஆ சொல்ல முடில)
5.minng செய்ய ஒரு நாளைக்கு அல்லது ஒரு மணிநேரத்துக்கு எவ்வளவு மின்சாரம் செலவாகும்?
உங்க desktop / laptop ஆகுற மின்சாரம்தான், இதற்காக உங்க system எவ்ளோ நேரம் running ல இருக்குமோ அவ்ளோ யூனிட்ஸ் போகும்.
6.MH/s,GH/s,TH/s என்றால் என்ன? எதனுடைய வேகத்தின் அளவு?
கணக்கு (முதல் பதில்ல சொன்ன மாதிரி) தீர்வு காணும் நேரத்தை நீங்க சொன்ன அளவீட்டுல அளக்கறாங்க.
*Images are from
http://blockchainstats.info. More details about mining can be found here
http://blockchainstats.info/mining